நவீன் ஜிந்தால் மகள் திருமணத்தில் பெண் எம்.பி.,க்கள் உற்சாக நடனம்!
தொழிலதிபரும் பாஜக எம்.பி.யுமான நவீன் ஜிந்தாலின் மகளின் பிரம்மாண்ட திருமணம் டெல்லியில் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. அதனை முன்னிட்டு 4ஆம் தேதி இரவு நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சி கவனம் பெற்றது. இசைக் கச்சேரியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
திருமண கொண்டாட்டத்தின் போது பாஜக எம்.பி. கங்கனா ரனாவத், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோர் பாலிவுட் பிரபல பாடலுக்கு நடனமாடினர். அரசியல் வேறுபாடுகளை ஓரமாக்கிய இந்த தருணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அங்கிருந்தோர் உற்சாகமாக கைதட்டினர்.
இந்த நடனக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக வைரலாகின. அதேபோல் நவீன் ஜிந்தால் எம்.பி., தனது சகோதரர்களுடன் பிரபல பாலிவுட் பாடலுக்கு நடனமாடும் மற்றொரு வீடியோவும் வெளியானது. ஆடம்பரமும் உற்சாகமும் கலந்த இந்த திருமண விழா இணையத்தை கலக்கி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!