பெண் காவலர் படுகொலை... கணவருக்கு 3 ஆயுள் தண்டனை...   நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 

கேரள மாநிலம் கண்ணூர் கரிவெள்ளூர் பகுதியில் கடந்த 2024-ஆம் ஆண்டு அரங்கேறிய பெண் காவலர் திவ்யஸ்ரீயின் கொடூர கொலை வழக்கில், இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 38 வயதான பெண் காவலர் திவ்யஸ்ரீயைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த அவரது கணவர் ராஜேஷுக்கு, கண்ணூர் நீதிமன்றம் தற்போது 3 ஆயுள் தண்டனைகள் மற்றும் ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதியை நிலைநாட்டும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு கேரளா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த அந்தச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. குடும்பத் தகராறு காரணமாகக் கணவரைப் பிரிந்து தனது தாயார் வீட்டில் திவ்யஸ்ரீ தனியாக வசித்து வந்தார். மேலும், ராஜேஷிடமிருந்து விவாகரத்து கோரி அவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், திவ்யஸ்ரீயின் வீட்டிற்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து, தான் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதத்தால் அவரைச் சரமாரியாக வெட்டிச் சாய்த்தார். இதில் திவ்யஸ்ரீ ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த வழக்கைத் தீவிரமாக விசாரித்த போலீசார், விவாகரத்து கேட்ட ஆத்திரத்தில்தான் ராஜேஷ் திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்தார் என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்தனர். சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் அனைத்தும் ராஜேஷுக்கு எதிராக இருந்த நிலையில், நீதிபதி இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கினார். ஒரு காவலருக்கே இந்த நிலைமையா என்று அன்று கொதித்தெழுந்த மக்களுக்கு, இன்று கிடைத்துள்ள இந்தத் தண்டனை ஒரு பாடமாக அமையும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்