காதலனுக்காகத் தாயைக் கொன்று கட்டிலுக்கு அடியில் புதைத்த மகள்... கொடூரம்!
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் அருகே ஜவஹர் நகரில், காதலுக்கு இடையூறாக இருந்த தாயைக் கொன்று வீட்டின் படுக்கையறை கட்டிலுக்கு அடியிலேயே புதைத்த மகளின் செயல் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது. பாரத் நகரைச் சேர்ந்த அஞ்சு என்ற பெண், கடந்தாண்டு மே மாதம் திடீரென மாயமானதாகப் புகார் அளிக்கப்பட்டிருந்தது. சுமார் 10 மாதங்களாகப் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மாயமான அஞ்சு மாயமாகவில்லை, அவர் வீட்டின் கட்டிலுக்கு அடியிலேயே சடலமாகப் புதைக்கப்பட்டிருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அஞ்சுவின் 2-வது மகளான இஷிகா, அதே பகுதியைச் சேர்ந்த மவுன்டியராஜ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். தனது வீட்டிற்கே காதலனை அழைத்து வந்த இஷிகாவைத் தாய் அஞ்சு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இஷிகா, "தாயைத் தீர்த்துக்கட்டினால்தான் நாம் நிம்மதியாக வாழ முடியும்" எனத் தனது காதலனுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, இருவரும் சேர்ந்து அஞ்சுவை கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். சடலத்தை வெளியே கொண்டு சென்றால் மாட்டிக் கொள்வோம் என அஞ்சிய அவர்கள், பெட்ரூம் கட்டிலுக்கு அடியில் 5 அடி ஆழத்திற்குப் பள்ளம் தோண்டி அஞ்சுவின் உடலைப் புதைத்துவிட்டு, ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடியுள்ளனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் இஷிகாவிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவர் 100 சதவீதம் உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து தாசில்தார் முன்னிலையில் வீட்டின் தரை தோண்டப்பட்டு, அழுகிய நிலையில் இருந்த அஞ்சுவின் உடல் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சுருக்கமான கொலை வழக்கில் இஷிகா மற்றும் அவரது காதலன் மவுன்டியராஜ் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தாயையே கொன்று வீட்டின் உள்ளேயே புதைத்த மகளின் கொடூரச் செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!