மதங்களை கடந்த இசை... சிவ தாண்டவம் பாடிய முஸ்லிம் மாணவி... வைரல் வீடியோ!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்ஷா ஜாகிர் ஒன்பதாம் வகுப்பு மாணவி. மிகவும் கடினமான சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை பக்தியுடன் பாடி அவர் அனைவரையும் வியக்க வைத்துள்ளார். துல்லியமான சமஸ்கிருத உச்சரிப்பு பலரின் கவனத்தை ஈர்த்தது.
முஸ்லிம் சிறுமி ஒருவர் சிவபெருமானின் சக்திவாய்ந்த ஸ்தோத்திரத்தை இவ்வளவு அழகாகப் பாடியது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ குறுகிய காலத்தில் ஒரு கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. பல லட்சம் பேர் விருப்பம் தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.
நிலம்பூர் பகுதியைச் சேர்ந்த அன்ஷா இசைத்துறையில் ஆர்வம் கொண்டவர். இந்த முயற்சி மதங்களை கடந்து மனிதர்களை இணைக்கும் கலைக்கு ஒரு சான்றாக பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் சிறந்த பின்னணி பாடகியாக வர வேண்டும் என்பதே தனது கனவு என அன்ஷா தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!