முத்துமாரியம்மன் கோயில் திருவிழா.. புதுக்கோட்டையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
இன்று மார்ச் 9ம் தேதி, புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் மக்களும் திருவிழாவில் கலந்துக் கொள்ள வசதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பின்படி, அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை வழங்கப்படும். திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்ள இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 14ஆம் தேதி பணிநாளாக செயல்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனினும் அரசு தேர்வுகள், முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!