"என் இதயம் புதுச்சேரியிலேயே இருக்கிறது" - ஐபிஎஸ் அதிகாரி இஷா சிங் உருக்கம்!
புதுச்சேரியின் லஞ்ச ஒழிப்புத் துறை சீனியர் போலீஸ் சூப்பிரண்டாகப் பணியாற்றிய இஷா சிங், தற்போது டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது அங்கிருக்கும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுக்கூட்டத்தில், கூட்டத்தை மிகச் சிறப்பாகவும், கண்ணியமாகவும் கையாண்ட விதம் இவரைத் தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களிடையே கவனிக்க வைத்தது.
டிசம்பர் 31 அன்று புதுச்சேரி கடற்கரையில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது, மக்கள் இவரை ஒரு சினிமா நட்சத்திரத்தைப் போலச் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுத்தனர். ஒரு காவல் அதிகாரிக்கு மக்கள் கொடுத்த இந்த வரவேற்பு சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. அதிகாரிகளுடனான கருத்து வேறுபாடு அல்லது மேலதிகாரிகளின் அழுத்தம் காரணமாகவே இஷா சிங் திடீரென டெல்லிக்கு மாற்றப்பட்டார் என்ற பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. கடந்த 4-ம் தேதி அவர் முறைப்படி புதுச்சேரியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
தன்னைப் பிரிந்து வருந்தும் புதுச்சேரி மக்களுக்குப் பதிலளிக்கும் விதமாக அவர், "புதுச்சேரி மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களை நான் மிகவும் 'மிஸ்' செய்கிறேன். நான் பணி நிமித்தமாக டெல்லிக்குச் சென்றாலும், புதுச்சேரியும் தமிழ்நாடும் என் வாழ்வின் ஒரு அங்கமாக எப்போதும் இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
இஷா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகச் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். கடமை தவறாத அதிகாரி என்பதைத் தாண்டி, தனது எளிமையான மற்றும் ஸ்டைலான அணுகுமுறையால் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார். இவரது திறமையான பணியைப் பாராட்டி புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஏற்கனவே நேரில் அழைத்து கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் இவர் காட்டிய தீவிரம் மக்களிடையே இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!