ஒகேனக்கல்லில் ஆண் சிறுத்தை மர்ம மரணம்.. உடலில் காயங்கள் இல்லை - அதிகாரிகள் விசாரணை!
சுற்றுலாப் பயணிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் விருப்பமான ஒகேனக்கல் வனப்பகுதியில், சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுமார் 16,000 ஹெக்டர் பரப்பளவைக் கொண்ட ஒகேனக்கல் வனப்பகுதியில் யானைகள், கரடிகள் மற்றும் சிறுத்தைகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. பென்னாகரம் பீட், சுத்து கோடு பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவர்கள், வனப்பகுதிக்குள் சிறுத்தை ஒன்று அசைவற்று விழுந்து கிடப்பதைக் கண்டு வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் சிவக்குமார் மற்றும் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இறந்து கிடந்தது சுமார் 10 வயது மதிக்கத்தக்க, 20 முதல் 25 கிலோ எடை கொண்ட ஒரு ஆரோக்கியமான ஆண் சிறுத்தை ஆகும்.
சிறுத்தையின் உடலில் துப்பாக்கிச் சூடு காயங்களோ அல்லது வேறு எந்த வெளிப்படையான காயங்களோ இல்லை. இதனால் இது வேட்டையாடப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. மற்ற விலங்குகளுடன் ஏற்பட்ட மோதலில் இறந்ததா அல்லது முதுமை மற்றும் நோய் காரணமாக இறந்ததா என்பது குறித்த மர்மம் நீடிக்கிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!