அடுத்தடுத்து இளம் வீராங்கனைகள் மர்ம மரணம்... விளையாட்டுக் கழக விடுதி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!
கேரள மாநிலம் கொல்லம் நகரில் செயல்பட்டு வரும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதியில் தங்கிப் பயிற்சி பெற்று வந்த இரண்டு வீராங்கனைகள், விடுதியின் மேல் தளத்தில் தூக்கிட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீராங்கனை சாண்டிரா (18), திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை வைஷ்ணவி (15) ஆகிய இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து வைஷ்ணவியின் தந்தை வேணு கூறுகையில், "ஜனவரி 15ம் தேதி அதிகாலை 6 மணிக்கு அழைத்த அதிகாரி, என்னை மட்டும் வரச் சொன்னார். ஆனால் விடுதிக்குச் சென்ற என்னை ஒரு மணி நேரம் விடுதியின் உள்ளே அனுமதிக்கவில்லை. எம்.பி. பிரேமசந்திரன் மற்றும் போலீஸ் கமிஷனர் வந்த பிறகே மகளின் உடலைப் பார்க்க அனுமதித்தனர்" என்றார்.
"இந்த சம்பவத்திற்கு முந்தைய நாள் தான், வெற்றி பெற்றதாக மகிழ்ச்சியுடன் என் மகள் போனில் பேசினாள். பணம் கேட்டாள், நானும் அனுப்பினேன். அப்படிப்பட்டவள் தற்கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை" என அவர் கண்ணீர் மல்கக் கூறினார்.
உயிரிழந்த சாண்டிராவின் பெற்றோர்கள், "அந்த விடுதி ஒரு சிறைச்சாலை போல இருப்பதாக என் மகள் அடிக்கடி கூறுவாள். அங்கிருந்து உயிருடன் வீடு திரும்புவோமா என்ற பயம் அவளுக்குள் இருந்தது" என வேதனையுடன் தெரிவித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!