undefined

உஷார்... சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்…   சுகாதாரத் துறை எச்சரிக்கை! 

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஓய்ந்தாலும், பனிக்காலத்தின் சில்லென்ற காற்றுடன் காய்ச்சல், சளி பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குழந்தைகள், முதியோர் பலர் காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, உடல்வலி போன்ற தொல்லைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சாதாரண சளி என அலட்சியப்படுத்த முடியாத வகையில், இந்த பாதிப்பு ஒருவரிடமிருந்து மற்றவருக்கு வேகமாக பரவி வருகிறது. இதனால் தற்போது எந்த வகையான வைரஸ் அதிகமாக தாக்குகிறது, அதில் ஏதேனும் உருமாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய பொது சுகாதாரத் துறை ஆய்வில் இறங்கியுள்ளது.

பெரும்பாலானவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் காய்ச்சல் மற்றும் சளி குணமடைவதால் அச்சப்பட தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!