undefined

வீட்டில் தனியாக இருந்த பெண்மணியைக் கட்டிப்போட்டு கொள்ளை - நகை, பணத்துடன் மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்!

 

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிட்லகட்டா டவுனில், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி, கை கால்களைக் கட்டிப் போட்டு நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிட்லகட்டா டவுன் இலகிநகர் பகுதியைச் சேர்ந்தவர் முபாரக். இவரது குடும்பத்தினர் அனைவரும் அஜ்மீருக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றிருந்ததால், முபாரக் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பெண் மட்டும் தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர்கள், முபாரக்கின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் முபாரக்கை கத்தியால் மிரட்டி, அவரது கை மற்றும் கால்களைக் கட்டினர். மேலும், அவர் சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை வைத்து அமுக்கி உள்ளனர்.

பின்னர், கொள்ளையர்கள் முபாரக் அணிந்திருந்த தங்க நகைகள், வீட்டில் இருந்த மற்ற தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். கொள்ளையர்கள் சென்ற பிறகு, முபாரக் ஊர்ந்து சென்று கதவுக்கு அருகில் வந்து கதவைத் தட்டியுள்ளார். நீண்ட நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்டதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் வந்து பார்த்தபோது, முபாரக் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக முபாரக்கை மீட்டுள்ளனர்.

இது குறித்து முபாரக், சிட்லகட்டா டவுன் போலீஸில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தனர். தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப்போட்டு, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!