வள்ளி கும்மி நடனமாடிய நயினார் நாகேந்திரன், அண்ணாமலை... தொண்டர்கள் உற்சாகம்!
"தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்" என்ற முழக்கத்துடன் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கோவையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் உற்சாகமாக நடனமாடி தொண்டர்களை மகிழ்வித்தார்.
கோவை மலுமிச்சம்பட்டியில் நேற்று நயினார் நாகேந்திரனின் 52-வது சுற்றுப்பயணத் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக, தமிழக சட்டமன்றம் போன்றே தத்ரூபமாகப் பிரசார மேடை வடிவமைக்கப்பட்டிருந்தது. இதில் தமிழக பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விழாவின் ஒரு பகுதியாக, பாரம்பரியக் கலையான வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்று சீரான தாளத்துடன் கும்மியடித்தனர்.
மேடையில் அமர்ந்து இந்தக் கலை நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை, ஆட்டத்தின் தாளத்தால் ஈர்க்கப்பட்டு மேடையை விட்டு இறங்கி கலைஞர்களுடன் இணைந்தனர். கலைஞர்கள் கும்மியடிக்கும் அதே தாளத்திற்கேற்ப இருவரும் கைகளைத் தட்டியும், சுழன்றும் வள்ளி கும்மி ஆடியது அங்கிருந்த தொண்டர்களிடையே பலத்த கரவொலியை ஏற்படுத்தியது.
அரசியல் பொதுக்கூட்டம் என்றாலே காரசாரமான பேச்சுகள் இருக்கும் நிலையில், பாரம்பரியக் கலையை ஊக்குவிக்கும் வகையில் தலைவர்கள் ஆடிய இந்த ஆட்டம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தங்களது பயணத்தின் போது தமிழகத்தின் கலாச்சாரத்தை முன்னிறுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!