undefined

ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.... நயினார் நாகேந்திரன் காட்டம்!

 

 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரெயில் நிலையம் அருகே வடமாநிலத் தொழிலாளி மீது 17 வயது சிறுவர்கள் கஞ்சா போதையில் அரிவாளால் தாக்கி, அதை ரீல்ஸாகப் பதிவு செய்த சம்பவம் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். புத்தகப்பையை சுமந்து கனவுகளுடன் கல்லூரிக்குச் செல்ல வேண்டிய வயதில், பயங்கர ஆயுதங்களுடன் போதையில் தடம் புரிவது வேதனையும் அச்சமும் தருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சக மனிதனை ரத்தம் சொட்டச் சொட்ட தாக்கியது மட்டுமல்லாமல், அதைக் காணொளியாக எடுத்து சிலாகிப்பது சிறார்களின் மன ஆரோக்கியம் போதைப் பழக்கத்தால் சிதைந்துள்ளதை வெளிப்படுத்துகிறது என நயினார் குற்றம்சாட்டினார். இது சமூகத்திற்கே பெரும் ஆபத்து என்றும், இத்தகைய நிகழ்வுகள் தமிழகம் எங்கு செல்கிறது என்ற கேள்வியை எழுப்புவதாகவும் தெரிவித்தார்.

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க களத்திற்கு வராமல் சினிமா பாணியில் காணொளி வெளியிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்றும், ரவுடிகளின் கூடாரமான திமுகவிடம் ஆட்சி அதிகாரம் கொடுத்த பாவத்தை தமிழகம் அனுபவிக்கிறது என்றும் கடுமையாக விமர்சித்தார். அனைத்திற்கும் விரைவில் முடிவு கட்டப்படும். தமிழகம் மீட்கப்படும் என்று நயினார் நாகேந்திரன் உறுதியுடன் தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!