ராமேஸ்வரம் மாணவி படுகொலை ... நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!
ராமேஸ்வரத்தில் 12-ம் வகுப்பு மாணவி காதலை நிராகரித்ததால், பள்ளிக்கு செல்லும் வழியில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த மிருகத்தனமான தாக்குதல் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். மாணவியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, இந்த துயரத்தை சமாளிக்க இறைவன் துணைநிற்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
பெண்களை குறிவைத்து தினமும் நடக்கும் தாக்குதல்கள் குறித்து அவர் கவலை தெரிவித்தார். “ஆயிரக்கணக்கான காவல்துறையினர் இருந்தும், நம் குழந்தைகளை நாம் உயிர் பிழைத்துப் பாதுகாக்க வேண்டிய நிலை” என்று கூறிய அவர், திமுக ஆட்சியில் பெண்கள் மீதான குற்றங்கள் குறையாமல் அதிகரித்துக் கொண்டே போகின்றன என சாடினார். பெண்களின் பாதுகாப்புக்காக பாஜக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியும், கண்டனங்கள் வெளியிட்டும் வருகின்றதாகவும் அவர் நினைவூட்டினார்.
இதற்கிடையில், தன் குடும்பத்தாரை மட்டுமே முன்னிறுத்தும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மக்களின் உயிர் மதிப்பில்லை என நயினார் நாகேந்திரன் கடுமையாக குற்றம் சாட்டினார். “இந்த காட்டாட்சி இனியும் தொடரக்கூடாது; திமுக அரசை கட்டுப்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணி விரைவில் நடவடிக்கை எடுக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!