தோழர் நல்லகண்ணு உடல் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானம்!
மறைந்த ஆர். நல்லகண்ணு அவர்களின் உடல் இன்று மாலை 4.30 மணிக்கு மருத்துவமனையில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது. கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை (பிப்.26) மாலை 4 மணி வரை அவரது உடல் அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பின்னர், அவரது விருப்பப்படியே உடல் தானமாக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்கப்பட உள்ளது. வாழ்நாள் முழுவதும் எளிமையுடன் வாழ்ந்த நல்லகண்ணு, மறைவிலும் சமூக நலனுக்காக எடுத்த இந்த முடிவு அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!