பிரியாணி திறப்பு விழாவில் நமீதா… ‘விஜய் அரசியலுக்கு சென்றது சினிமாவுக்கு இழப்பு’!
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி அருகே புறவழிச்சாலையில் பிரபல பிரியாணி கடையின் புதிய கிளை இன்று திறக்கப்பட்டது. விழாவில் தேனி எம்.பி. தங்க தமிழ்செல்வன் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி கடையை திறந்து வைத்தார். தொடக்க நாளிலேயே கடையில் கூட்டம் குவிந்தது.
இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகை நமீதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரை காண இளைஞர்கள் ஏராளமாக கடை முன்பு திரண்டனர். விழா பகுதி முழுவதும் திருவிழா போல காட்சியளித்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நமீதா, சென்னையில் தாமும் கணவரும் இணைந்து நடிப்பு பள்ளி ஒன்றை தொடங்கி வகுப்புகள் நடத்தி வருவதாக கூறினார். நடிகர் விஜய் அரசியலுக்கும், நடிகர் அஜித் ரேசிங்குக்கும் சென்றுவிட்டதாக குறிப்பிட்டார். திறமையான புதிய நடிகர்களுக்கு திரையுலகில் அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்றும், விஜய் அரசியலுக்கு சென்றது தமிழ் சினிமாவுக்கு இழப்பு என்றும் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!