நம்ம சத்தம்.. சிம்பு பிறந்த நாளில் ‘பத்து தல’ அதிரடி!முதல் சிங்கிள் வெளியீடு!
ஒரு சிம்புவையே சமாளிக்க முடியாது.. இதுல ‘பத்து தல’ என்றால்?! அப்படி தான் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்று பில்டப் கொடுத்து வந்த படக்குழு, சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3ம் தேதி படத்தின் சிங்கிள் ட்ராக்கை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது. இதை முதலிலேயே சொல்லியிருக்கலாமே? என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால், பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்கள் இப்போதெல்லாம் படத்தின் கதையை நம்புவதில்லை. படத்தோட பப்ளிசிட்டி தான் பெருசா... ரொம்ப பெருசா இருக்கணும்னு நெனைக்கறாங்க. அதனால, இன்னைக்கு சாயந்தரம் படத்தோட அப்டேட் என சொல்லி, சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை கிறுக்காக்கி, அதன் பிறகு இந்த தேதியில ஒரு பாட்டோ, டீஸரோ, ட்ரைலரோ ரிலீஸ் பண்றோம்னு அடுத்த பில்டப் கொடுப்பதை வழக்கமாக வெச்சிருக்காங்க.
இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இதையடுத்து நடிகர் கௌதம் கார்த்திக்கும் நடிகை பிரியா பவானி சங்கரும் தங்களது டப்பிங் பணிகளை முடித்ததாக தெரிவித்திருந்தனர். தற்போது படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக டிசம்பர் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகும் என்று மறைமுகமாக பில்டப் கொடுக்கப்பட்டு, படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இருங்க... இருங்க.. சிம்பு படம் சொன்ன தேதியில எப்போ ரிலீஸ் ஆகியிருக்குன்னு புலம்புறது கேட்குது. ஆனா, இப்போ சிம்பு அப்படியெல்லாம் கிடையாதாம். தற்போது படத்தின் வெளியீடு மார்ச் 30ம் தேதி என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ’நம்ம சத்தம்’ என தொடங்கும் படத்தின் முதல் பாடல் சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் ஏகப்பட்ட பில்டப்புகளுக்கு மத்தியில் அறிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க