undefined

நம்மாழ்வார் இயற்கைத் தாயின் பெருமகன் ...  சீமான் புகழாரம்!

 

அனைத்து உயிர்களையும் அன்புடன் நேசித்து நின்ற இயற்கைத்தாயின் பெருமகன் நம்மாழ்வார் என்று, அவரது நினைவு தினத்தையொட்டி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழாரம் சூட்டியுள்ளார். மண்ணையும் மக்களையும் நேசித்து, தாய் மடிபோல் இயற்கை அன்னையைப் போற்றி வாழ்ந்த பெருந்தமிழர் என அவர் குறிப்பிட்டுள்ளார். உழவாண்மையின் அவசியத்தை உலகுக்கு உணர்த்திய பேரறிஞராக நம்மாழ்வாரை அவர் நினைவுகூர்ந்தார்.

“நஞ்சில்லா உணவு, அதுவே எம் கனவு” என்ற சிந்தனையை மக்களுக்குள் விதைத்தவர் நம்மாழ்வார் என சீமான் கூறினார். “விதைத்துக்கொண்டே இரு, முளைத்தால் மரம்; இல்லையேல் மண்ணுக்கு உரம்” என்று இளந்தலைமுறைக்கு வாழ்க்கைப் பாடம் புகட்டிய பேராசான் என்றும் அவர் புகழ்ந்தார். இயற்கை வேளாண்மை மனித வாழ்வின் அடித்தளம் என்பதை அவர் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

மண்ணைக் காக்கவும், பாரம்பரிய விதைகளை மீட்கவும் வாழ்நாள் முழுவதும் போராடிய மண்ணுரிமைப் போராளி நம்மாழ்வார் என சீமான் கூறினார். வேப்ப மரத்தின் காப்புரிமையைப் போராடி பெற்றுத் தந்த பேரரண் என்றும், ‘விதைகளே பேராயுதம்’ என்று முழங்கிய தமிழ்ப்பெருங்குடியோன் என்றும் நினைவு கூர்ந்தார். இயற்கையின் மொழியறிந்து வாழ்வியலைக் கற்றுத் தரும் வேளாண்மை வேதமாக நம்மாழ்வாரின் புகழ் நிலைத்திருக்கும் என அவர் பதிவிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!