நாங்குநேரியில் கொடூரக் கொலையில் 2 பேர் பலி, 5 பேர் படுகாயம்... விஜய் கடும் கண்டனம்!
நான்குனேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் பரபரப்பான தாக்குதல் நடந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல், சாலையில் சென்றவர்கள் மற்றும் டீக்கடை அருகே நின்றவர்களை சரமாரியாக ஆயுதங்களால் வெட்டியது. இந்த கொடூர சம்பவத்தில் வடமாநில செங்கல் சூளை தொழிலாளி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் கடுமையான வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், சட்டம் ஒழுங்கு நிலை குறித்து கடுமையான கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும், காவல் துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். இந்த நிகழ்வு மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!