நிலவைச் சுற்றும் நாசாவின் ஓரியன் விண்கலம்: விண்வெளி வீரர்கள் நெகிழ்ச்சி!

 


வாஷிங்டன்: நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் நாசாவின் ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ், நான்கு விண்வெளி வீரர்களுடன் சென்ற ஓரியன் விண்கலம் விண்வெளியில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. கடந்த 1969-ஆம் ஆண்டிற்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டத்தில், விண்வெளி வீரர்கள் நிலவில் தரை இறங்காமல் அதனைச் சுற்றி வந்து ஆய்வு செய்வார்கள்.

பூமியிலிருந்து மனிதர்கள் இதுவரை பயணம் செய்திராத மிக அதிகத் தொலைவிற்குச் செல்லும் இந்த முயற்சி, ஏவப்பட்ட 2 நாட்கள் 5 மணி நேரத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. விண்கலம் நிலவை நெருங்கிச் சென்றுகொண்டிருக்கும் வேளையில், அங்கிருந்து நிலவைப் பார்ப்பது மிகவும் அற்புதமாகவும் வியப்பாகவும் இருப்பதாக விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டமானது எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவில் தளம் அமைப்பதற்கும், செவ்வாய் கோளுக்குப் பயணம் செய்வதற்கும் ஒரு முன்னோட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்கலத்திலிருந்து பெறப்படும் நிலவின் புதிய புகைப்படங்கள் மற்றும் தரவுகள் விண்வெளி ஆராய்ச்சியாளர்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளன

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!