தேசிய கீதத்திற்கு முன் ‘வந்தே மாதரம்’ கட்டாயம்… மத்திய உள்துறை புதிய உத்தரவு!
தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடுவதற்கு முன் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடல் ஒலிக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ஜனவரி 28 அன்று வெளியிடப்பட்டுள்ளன. அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் தேசிய கீதத்திற்கு முன் ‘வந்தே மாதரம்’ பாடலின் 6 சரணங்களும் கட்டாயம் பாட அல்லது ஒலிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாடல் முழுமையாக ஒலிக்க சுமார் 3 நிமிடம் 10 விநாடிகள் ஆகும். குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் இந்த பாடல் ஒலிக்கப்பட வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும் குடியரசுத் தலைவர் நாட்டிற்கு உரையாற்றும் போது அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு முன்பும் பின்னும் இந்த பாடல் ஒலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘வந்தே மாதரம்’ பாடலின் அதிகாரப்பூர்வ பதிப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் ஒலிக்கப்படும் போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!