தமிழகத்தின் ‘தங்க’ மகன்... தேசிய தடகளப் போட்டியில் 4 தங்கப் பதக்கங்களை வென்று கும்பகோணம் இளைஞர் சாதனை! 

 

பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா மாவட்டம் தல்வாண்டி சபோ நகரில் உள்ள குருகாஷி பல்கலைக்கழக மைதானத்தில், 45-ஆவது தேசிய அளவிலான மாஸ்டர்ஸ் தடகளப் போட்டிகள் கடந்த மார்ச் 14 முதல் 16-ஆம் தேதி வரை மிகச் சிறப்பாக நடைபெற்றன.

இந்தப் போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 30 வயது முதல் 100 வயது வரையிலான தடகள வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் எனப் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் தமிழகத்தின் கும்பகோணம் சோலையப்பன் தெருவைச் சேர்ந்த சாமிநாதனின் மகன் ஜவஹர் (36), 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்றுத் தனது அபாரத் திறமையை வெளிப்படுத்தினார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் தனிநபர் ஓட்டப் பந்தயங்களில் மின்னல் வேகத்தில் ஓடி முதலிடம் பிடித்ததுடன், நீளம் தாண்டுதல் போட்டியிலும் தங்கம் வென்று அசத்தினார். இது தவிர, 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியிலும் பங்கேற்றுத் தனது அணிக்கு முதலிடத்தைப் பெற்றுத் தந்தார்.

ஒரே தேசியப் போட்டியில் நான்கு தங்கம் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள ஜவஹருக்குத் தமிழக விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் கும்பகோணம் பொதுமக்கள் தங்களின் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். வயது என்பது வெறும் எண்கள் மட்டுமே என்பதைத் தனது கடின உழைப்பின் மூலம் நிரூபித்துள்ள இவருக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!