துப்பாக்கியோடு வந்து சரணடைந்த மாவோயிஸ்ட் 'கிங்' சுக்ரூ... 55 லட்சத்துக்கு 'செக் !
ஒடிசா மாநில காவல்துறையினருக்குப் பல ஆண்டுகளாகச் சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவோயிஸ்ட் தளபதி கோசா சோதி (என்ற) சுக்ரூ (49), இன்று ஏ.கே.-47 ரகத் துப்பாக்கி மற்றும் அதிரடி ஆயுதங்களுடன் கந்தமால் போலீசாரிடம் சரணடைந்தார். இவரைப் பற்றித் துப்பு கொடுப்பவர்களுக்குச் சுமார் 55 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தச் சரண் சம்பவம் மாவோயிஸ்ட் இயக்கத்திற்குப் பேரிடியாக அமைந்துள்ளது.
மால்கன்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியினரான சுக்ரூ, கடந்த காலங்களில் சக மாவோயிஸ்டுகள் போலீசில் சரணடைவதைக் கடும் இரும்புக்கரம் கொண்டு தடுத்து வந்தவர். சமீபத்தில், ரேணு (31) என்ற பெண் மாவோயிஸ்ட் தளபதி 12 பேருடன் சரணடையத் திட்டமிட்டபோது, ஆத்திரமடைந்த சுக்ரூ தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரேணுவைப் படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது. சக உறுப்பினரையே போட்டுத்தள்ளும் அளவுக்குத் தீவிரமாக இருந்த சுக்ரூ, இன்று திடீரென மனம் மாறி ஐந்து கூட்டாளிகளுடன் போலீஸ் கையில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா - சத்தீஸ்கர் எல்லையில் மாவோயிஸ்டுகளின் பிடி தளர்ந்து வருவதையும், அரசின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளால் அவர்கள் வன்முறையைக் கைவிட்டு வருவதையும் இந்தச் சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது. சரணடைந்த சுக்ரூவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் மாவோயிஸ்டுகளின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் ரகசியத் திட்டங்கள் அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!