நீட் தேர்வுக்கு படிக்க சொன்னதால் ஆத்திரம் ... தந்தையை சுட்டுக் கொன்று உடலை துண்டு துண்டாக்கி வீசிய மகன்...!
உத்தரப்பிரதேசம் லக்னோவில் ஆஷியானா பகுதியை சேர்ந்த மன்வேந்திர சிங் (49) மருந்து தயாரிப்பு தொழில் செய்து வந்தார். தனது மகன் அக்சத் பிரதாப் சிங் (21) மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்க வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தந்தை–மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருமுறை வீட்டை விட்டு வெளியேறியிருந்த மகன், மீண்டும் வீட்டில் தங்கியிருந்தார்.
கடந்த 20ஆம் தேதி மாலை மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அக்சத் தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் என போலீசார் தெரிவித்தனர். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி பைகளில் அடைத்து வெளியில் வீசியதாக கூறப்படுகிறது. சில பாகங்களை வீட்டிலேயே மறைத்து வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
தந்தை காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. அக்சத் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!