மருத்துவர்களின் அலட்சியம்... அறுவைசிகிச்சை மூலம் குழந்தை… பஞ்சுத்துணியை உள்ளே வைத்து தையல் போட்ட கொடூரம்... பரபரப்பு!
ஹரியானா மாநிலத்தில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் மருத்துவமனைக்கு சென்றனர். சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறியதையடுத்து அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்தது. ஆனால் மருத்துவக்குழு குழந்தையை வெளியே எடுத்த பிறகு தையல் போட்ட போது தவறுதலாக ஒரு பஞ்சுத் துணியை உள்ளேயே வைத்துவிட்டனர்.
அறுவைசிகிச்சைக்கு பிறகு அந்தப் பெண் மிகக் கடுமையான வயிற்று வலியால் துடிதுடித்தார். தற்போது அந்த பெண் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையின் இந்த அலட்சிய நடவடிக்கையை கண்டித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து அந்த பெண்ணின் கணவர் தனது மனைவி பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவத்திற்கு பின், உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருந்தது. பல மருத்துவமனைகளை அணுகியும், சரியான விளக்கம் கூறவில்லை. அல்ட்ராசவுண்ட் மையம் கூட, உண்மையை மறைத்துவிட்டதாக தெரிகிறது.
இதன்பிறகு அந்தப் பெண்ணை பஞ்ச்குலாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து வயிற்றுக்குள் ஒரு பஞ்சு துணியை அகற்றியுள்ளனர். பஞ்சுக்குவியலால் உடலில் தீவிரமான தொற்றுகள் பரவியதோடு, கண்பார்வைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தில் பொறுப்புள்ள மருத்துவரும், மருத்துவமனை நிர்வாகமும் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். விசாரணையை விரைவாக செய்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தீர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது, இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!