நெல்லை டூ தூத்துக்குடி தனியார் பேருந்து  200 மீட்டர் தூரம் தரிசு நிலத்தில் பாய்ந்து ‘பகீர்’ விபத்து!

 

 


திருநெல்வேலியில் இருந்து இன்று (ஏப்ரல் 07) காலை பயணிகளுடன் தூத்துக்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்ட போதிலும், 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று, நெல்லை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் பேருந்து அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாடு தவறியுள்ளது. நிலைதடுமாறிய அந்தப் பேருந்து, சாலையை விட்டு இறங்கி அருகிலிருந்த தரிசு நிலத்திற்குள் சுமார் 200 மீட்டர் தூரம் தாறுமாறாக ஓடிப் பாய்ந்தது. பேருந்துக்குள் இருந்த பயணிகள் அலறியடித்தபடி ஒருவரையொருவர் பிடித்துக் கொண்டனர். அந்தப் பகுதியில் மின்கம்பங்கள் மற்றும் பள்ளங்கள் இருந்த நிலையில், நல்வாய்ப்பாகப் பேருந்து எதிலும் மோதாமல் நின்றதால் ஒரு பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்தில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, உடனடியாகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமா அல்லது பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். "பெரிய பள்ளத்திலோ அல்லது மின்கம்பத்திலோ மோதியிருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும், கடவுள் புண்ணியத்தில் உயிர் பிழைத்தோம்" எனப் பேருந்தில் பயணித்த பயணிகள் அச்சத்துடன் தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!