4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... குற்றவாளிக்கு  சாகும் வரை ஆயுள் தண்டனை ... போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! 

 

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டு 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லெட்சுமணகுமார் என்ற 45 வயது நபருக்கு நீதிமன்றம் அதிரடி தண்டனை வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த நபரைக் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிரான ஆதாரங்கள் உறுதியாக இருப்பதால் அவருக்குச் சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு ரூ5000 அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ3லட்சம்  நிவாரணத் தொகை வழங்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். பிஞ்சு குழந்தையிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட நபருக்குக் கிடைத்துள்ள இந்த உச்சகட்ட தண்டனை சமூக விரோதிகளுக்கு ஒரு பாடமாக அமையும் எனப் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்த காவல் துறை அதிகாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசண்ணகுமார் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை ஆறு போக்சோ வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒருவருக்கு மரண தண்டனையும் மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளும் கிடைத்துள்ளதால் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!