undefined

ரூ.822 கோடி செலவில் பிராட்வே புதிய பேருந்து நிலையம்... முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!

 

சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) இணைந்து இந்த பிரம்மாண்ட திட்டத்தைச் செயல்படுத்துகின்றன. மொத்தம் 822.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தப் புதிய ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைய உள்ளது. தற்போதைய பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டடம் அமைந்துள்ள ஒட்டுமொத்தப் பகுதியும் இணைக்கப்பட்டு, ஒரே வளாகமாக மாற்றப்பட உள்ளது. தரைத்தளம் மற்றும் 10 அடுக்குகளைக் கொண்ட நவீனக் கட்டடமாக இது உருவாகிறது. இதில் பேருந்து நிலையத்துடன் சேர்த்து, வணிக வளாகங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவகங்கள் இடம்பெற உள்ளன.

பழைய பிராட்வே பேருந்து நிலையத்தின் நெரிசலைக் குறைத்து, பயணிகளுக்குப் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது: இந்தப் பேருந்து நிலையம் சென்னை கோட்டை புறநகர் ரயில் நிலையம் மற்றும் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையங்களுடன் இணைக்கப்படும். இதனால் பயணிகள் எளிதாக ஒரு போக்குவரத்து முறையிலிருந்து மற்றொன்றிற்கு மாற முடியும்.

இரண்டு நிலைகளில் அமையுள்ள பாதாள தளங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் 800-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் வசதிகள் செய்யப்படுகின்றன. இந்த முனையம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் சாய்தளங்கள், மின்தூக்கிகள் மற்றும் பிரத்யேக கழிப்பறைகள் அமைக்கப்படும். கட்டுமானப் பணிகள் தொடங்குவதால், பிராட்வேயிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

பெரும்பாலான மாநகரப் பேருந்துகள் தீவுத் திடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. கட்டுமானப் பணிகள் அடுத்த 24 முதல் 30 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை பாரிமுனைப் பகுதியின் அடையாளத்தையே மாற்றியமைக்கும் ஒரு மைல்கல் திட்டமாக இது பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!