undefined

ரூ.9.83 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம்... பொள்ளாச்சியில் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!

 

பொள்ளாச்சி நகராட்சி சி.டி.சி. மேடு பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் இந்தப் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 3.83 ஏக்கர் பரப்பளவில், ஒரே நேரத்தில் 29 பேருந்துகள் நிறுத்தும் வசதியுடன் இந்தப் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதில் 64 கடைகள், ஒரு பெரிய உணவகம், ஏ.டி.எம் வசதி, பயணச்சீட்டு முன்பதிவு மையம், மற்றும் தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை போன்ற நவீன வசதிகள் உள்ளன.

24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கட்டுப்பாட்டு அறை மற்றும் காவலர் அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு உயர் கோபுர மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்ததோடு மட்டுமல்லாமல், சுமார் ரூ. 11.15 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேலும், ரூ. 61.97 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பொள்ளாச்சி கோயம்புத்தூர் - பல்லடம் சாலைகளை இணைக்கும் புதிய சாலைக்கு, முதலமைச்சரின் உத்தரவின்படி "அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் சாலை" எனப் பெயர் சூட்டி, அதற்கான பதாகையையும் அவர் திறந்து வைத்தார்.

பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகராட்சி கூடுதல் அலுவலகக் கட்டடத்தையும் அவர் திறந்து வைத்தார்.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்தப் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது, அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!