புதிய சர்ச்சை... சிபிஎஸ்இ பாடப்புத்தங்களுக்கு இந்தியில் பெயர் வைத்த NCERT!
இந்த விவகாரம், குறிப்பாக தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இந்தி மொழி திணிப்பு என கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய கலாச்சாரத்தின் வேர், பன்மொழி, அனுபவக் கற்றல் மற்றும் கல்வி தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்தல் இவைகளின் அடிப்படையில் இந்த நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை மற்றும் மகாராஷ்டிராவில் ஐந்தாம் வகுப்பு வரை இந்தியை மூன்றாவது கட்டாய மொழியாகப் பயிற்றுவிப்பது குறித்த சர்ச்சை ஓயவில்லை. இந்த சமயத்தில் NCERT புத்தகங்களில் இந்தி தொடர்பாக ஒரு புதிய சர்ச்சை தொடங்கியது.
அதாவது, NCERT பல்வேறு வகுப்புகளுக்கான புதிய புத்தகங்களின் தலைப்புகளை இந்தியில் வழங்கியுள்ளது. 1 மற்றும் 2ம் வகுப்புகளுக்கான ஆங்கில பாடப்புத்தகங்கள் ‘மிருதாங்’ (மிருதாங், ஒரு தென்னிந்திய இசைக்கருவி) எனப் பெயரிடப்பட்டுள்ளன. 3 ம் வகுப்பு புத்தகத்தின் பெயர் ‘சந்தூர்’ (சந்தூர், ஒரு காஷ்மீர் நாட்டுப்புற இசைக்கருவி). 6ம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தின் பெயர் ‘ஹனிசக்கிள்’ என்பதிலிருந்து ‘பூர்வி’ (பூர்வி, ஒரு ராகத்தின் பெயர்) என மாற்றப்பட்டது.
இந்நிலையில், புதிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2023 அடிப்படையில் இந்த பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாகவும் பள்ளி குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல், அறிவியல் அறிவினை வழங்குவதற்காக இந்தியில் பெயர் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் NCERT விளக்கம் அளித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!