undefined

புதிய சாதனை... டாஸ்மாக்கில் ஒரே நாளில் ரூ.220 கோடிக்கு மது விற்பனை... குடியரசு தின விடுமுறை எதிரொலி!

 

குடியரசு தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்புக்கு முன்னதாகவே, மதுபானங்களை இருப்பு வைக்க மதுப்பிரியர்கள் முண்டியடித்ததால், தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்பனை அசுர வேகத்தில் நடந்துள்ளது.

ஜனவரி 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ரூ.220 கோடியே 75 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. ஜனவரி 26 குடியரசு தினம் என்பதால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மனமகிழ் மன்றங்கள் மற்றும் ஹோட்டல் பார்கள் மூலம் மட்டும் சுமார் ரூ.5 கோடியே 43 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் அண்மையில் முடிவடைந்த பொங்கல் பண்டிகை கால விற்பனையுடன் ஒப்பிடுகையில், குடியரசு தின விற்பனை கணிசமான வருவாயைத் தந்துள்ளதாகத் தெரிகிறது. போகி மற்றும் பொங்கல் ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் சுமார் ரூ.519 கோடிக்கும், ஒட்டுமொத்தப் பண்டிகை நாட்களில் (ஜனவரி 14 - 18) சுமார் ரூ.850 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றிருந்தது.

பொங்கல் விடுமுறை நாட்களில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.250 கோடி வரை விற்பனை ஆன நிலையில், தற்போது சாதாரண வார இறுதியில் ஒரு விடுமுறையை முன்னிட்டு ரூ.220 கோடி விற்பனையாகியுள்ளது கவனிக்கத்தக்கது.

வழக்கம் போலச் சென்னை மண்டலத்தில் அதிகபட்ச விற்பனை பதிவாகியுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் மதுரை மற்றும் திருச்சி மண்டலங்கள் உள்ளன. வரும் பிப்ரவரி 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வடலூர் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு மீண்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் ஜனவரி 31-ம் தேதியும் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

விடுமுறை தினமான நேற்று சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதைத் தடுக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படைகள் மூலம் தீவிரக் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விதிகளை மீறிய கடைகள் மீது அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!