undefined

 ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு  புதிய கட்டுப்பாடு… ஆதார் இணைப்பு கட்டாயம்

 
 

ரயில்களில் டிக்கெட் முன்பதிவுக்கு ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை தட்கல் டிக்கெட்டுக்கு மட்டும் இருந்த இந்த நடைமுறை, இனி 60 நாட்களுக்கு முன்பாக செய்யும் சாதாரண முன்பதிவுகளுக்கும் பொருந்தும். பதிவு செய்யப்படாத ஏஜெண்டுகள் டிக்கெட்டுகளை கைப்பற்றி, பொதுமக்களுக்கு கிடைக்காமல் செய்வதாக வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 12 முதல் இந்த விதிமுறை முழுமையாக அமலுக்கு வருகிறது. அந்த நாளிலிருந்து, முன்பதிவு தொடங்கும் நேரமான காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை, ஆதார் இணைக்கப்பட்ட ஐஆர்சிடிசி கணக்குகள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இடைப்பட்ட காலமாக, டிசம்பர் 29 முதல் நேரக் கட்டுப்பாடுகள் படிப்படியாக அதிகரிக்கப்படுகின்றன. ஜனவரி 5 முதல் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை, ஜனவரி 12 முதல் முழு நாளும் இந்த கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும்.

ஆதார் இணைக்காதவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகே முன்பதிவு செய்ய முடியும். ஆனால், ரயில் நிலைய கவுன்டர்களில் நேரடியாக டிக்கெட் எடுப்பவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது. நேர்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யவும், ஏஜெண்டுகள் வசூலிக்கும் கூடுதல் கட்டணங்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!