undefined

 வாட்ஸ் அப், டெலிகிராம் பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்  ...  மத்திய அரசு அதிரடி உத்தரவு! 

 
 

இந்தியாவில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதோடு, சைபர் குற்றங்களும் அதிகரித்து வருவதாக மத்திய தொலைத்தொடர்பு துறை கவலை தெரிவித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய தொலைத்தொடர்பு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


 

வாட்ஸ் அப், டெலிகிராம், சிக்னல், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், ஜியோசாட், ஷேர் சாட் உட்பட  மெசேஜிங் மற்றும் சமூக வலைத்தள செயலிகள் ஆக்டிவ் சிம் கார்டு இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும்.

முந்தைய நடைமுறைப்படி செயலியை நிறுவிய பின் சிம் அகற்றப்பட்டாலும், அல்லது சிம் செயலிழந்தாலும், இணையம் இருந்தால் செயலிகள் இயங்கிக் கொண்டே இருந்தன. இதன் காரணமாக அடையாளத்தை மறைத்து சைபர் குற்றங்கள் நடப்பதும் அதிகரித்தது.

மொபைலில் செயலிகள் பயன்படுத்த செல்லுபடியாகும் சிம் கட்டாயம்
சிம் இனஆக்டிவ் ஆனால் செயலிகள் தானாகவே செயலிழக்கும்
டெஸ்க்டாப்/கணினி வழியாக செயலிகள் பயன்படுத்தினால்
 ▪ ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் லாக் அவுட்
 ▪ மீண்டும் உள்நுழைய QR ஸ்கேன் கட்டாயம்
புதிய விதிகளை 90 நாட்களுக்குள் நிறுவனங்கள் அமல்படுத்த வேண்டும் என மத்திய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்தால், சமூக வலைதள பயன்பாட்டில் பாதுகாப்பு அதிகரிக்கும் என்றும், போலி கணக்குகள், அனாமதேய சைபர் தாக்குதல்கள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!