விசா உங்களுக்கு... கனிமம் எங்களுக்கு ... அமெரிக்கா – சீனா இடையே புதிய வர்த்தகம் ஒப்பந்தம்.!
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தம் சுமூகமான முடிவை எட்டியிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் டிரம்ப் ஒப்புதலுக்கு பிறகு அதனை இறுதி செய்ய சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ஒப்புதல் காத்திருக்கிறது.
இந்த ஒப்பந்தத்தில் சீனா அமெரிக்காவுக்கு காந்தங்கள், அரிதான தனிமங்களை வழங்கும், சீன மாணவர்களுக்கான விசாக்களை அமெரிக்கா அனுமதிக்கும் எனவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தை சீன அதிபரும், தானும் இறுதி செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், ”இந்த ஒப்பந்தத்தில் முக்கியமான கனிமங்கள், சீன மாணவர்களின் கல்விப் பரிமாற்றம் மற்றும் வரி விதிப்புகள் ஆகியவை அடங்கும். புதிய ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா சீன இறக்குமதிகளுக்கு 55% வரிகளை விதிக்கவுள்ளது.
அதே நேரத்தில், சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு 10% மட்டுமே வரியாக விதிக்கும். அமெரிக்கக் கல்வி நிறுவனங்களில் சீன மாணவர்கள் தொடர்ந்து கல்வி பயில அமெரிக்க அதிபர் அனுமதி அளித்துள்ளார்.இது குறித்து அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் ”கடந்த மாதம் ஜெனீவாவில் எட்டப்பட்ட ஆரம்ப ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. ” எனக் கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!