undefined

உலகம் முழுவதும் புத்தாண்டு   முதலில் எங்கு, கடைசியில் எங்கு?

 

உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் இடம் பசிபிக் கடலில் உள்ள சிறிய தீவு நாடான கிரிபாதி. இந்திய நேரப்படி டிசம்பர் 31-ம் தேதி மாலை 3.30 மணிக்கு அங்கு புத்தாண்டு பிறக்கிறது. உலகின் கிழக்குக் கோடியிலேயே புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்குகிறது.

இதன் பின்னர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் மாலை 6.30 மணிக்கும், ஜப்பானின் டோக்கியோவில் இரவு 8.30 மணிக்கும் புத்தாண்டு வருகிறது. சீனாவின் பெய்ஜிங்கில் இரவு 9.30 மணி. துபாயில் நள்ளிரவு 1.30 மணி. ரஷ்யாவின் மாஸ்கோவில் 2.30 மணி. பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஜனவரி 1-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் காலை 10.30 மணிக்கும், லாஸ் ஏஞ்சலிஸில் பிற்பகல் 1.30 மணிக்கும் புத்தாண்டு வருகிறது. உலகின் மேற்குக் கோடியில் உள்ள பேக்கர் தீவில் இந்திய நேரப்படி ஜனவரி 1-ம் தேதி மாலை 5.30 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது. கிழக்குக் கோடியில் தொடங்கும் புத்தாண்டு, 26 மணி நேரத்துக்குப் பிறகே மேற்குக் கோடியை அடைகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!