undefined

"நியூ இயர் கொண்டாட்டங்கள் அதிகாலை 1 மணியுடன் முடிய வேண்டும்!" - வழிகாட்டு விதிமுறைகள் வெளியீடு.. சொகுசு ஹோட்டல்களுக்கு கெடுபிடி!

 

சென்னையில் 2026 புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறை கடுமையான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 31-ம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கி, அதிகாலை 1 மணிக்குள் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொள்ள வேண்டும். உணவு மற்றும் மதுபான சேவைகள் அனைத்தும் அதிகாலை 1 மணிக்கு மேல் வழங்கப்படக் கூடாது. இந்த நேரக் கட்டுப்பாட்டை மீறினால் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விடுதியின் நுழைவு வாயில்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் அரங்குகள் அனைத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.

விடுதிக்கு வரும் அனைத்து வாகனங்களையும் முறையாகச் சோதித்து, அவற்றின் எண்களைப் பதிவு செய்ய வேண்டும். சாலைகளில் எக்காரணம் கொண்டும் வாகனங்களை நிறுத்தக் கூடாது.

பெண்களைக் கேலி செய்வதைத் தடுக்கப் போதுமான ஆண் மற்றும் பெண் பாதுகாவலர்களைக் கட்டாயம் பணியமர்த்த வேண்டும்.

அமைக்கப்படும் மேடைகளின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை மற்றும் தீயணைப்புத் துறையிடம் சான்றிதழ் பெற வேண்டும்.

நீச்சல் குளத்தின் அருகிலோ அல்லது அதன் மீதோ மேடைகள் அமைக்கக் கூடாது. கொண்டாட்டத்தின் போது நீச்சல் குளத்திற்குச் செல்லும் வழிகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட வேண்டும்.

விடுதி வளாகத்திற்குள் எந்தவிதமான பட்டாசுகளையும் வெடிக்க அனுமதி இல்லை.

கேளிக்கை நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட அரங்கிற்குள் மட்டுமே நடத்த வேண்டும்.

நட்சத்திர விடுதிகள் மட்டுமின்றி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது:

மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரைச் சாலை (ECR), ராஜீவ் காந்தி சாலை (OMR) ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விதியை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!