undefined

நியூ இயர் பார்ட்டி... போதை மாத்திரை விற்ற பெண் போலீசின் கணவர் கைது!

 

சென்னையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்கப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சைதாப்பேட்டை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்தப் பகுதியில் மாறுவேடத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரைச் சந்தேகத்தின் பேரில் பிடித்துச் சோதனையிட்டபோது, அவர்களிடம் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் பிடிபட்ட நபர்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.  சைதாப்பேட்டையைச் சேர்ந்த பிரபாகரன் (27), சென்னை ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றும் ஒரு பெண் போலீசின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.  சேலையூரைச் சேர்ந்த ஹரிசுதன் (23), தொழில்முறையில் ஒரு டாக்டர் என்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

'மெத்தபெட்டமைன்' (Methamphetamine) போன்ற உயர்தர போதைப்பொருட்கள் விற்கப்படுவதைத் தடுக்க, சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு மற்றும் பரங்கிமலை போலீசார் இணைந்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!