நடுரோட்டில் கிடந்த புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைக்கு ‘நாய்’கள் அரண் ... நெகிழ்ச்சி!
கல்கத்தா ரயில்வே குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவறை வெளியே, தொப்புள்கொடி கூட உதிராத பச்சிளம் குழந்தையை யாரோ இரவின் கடும் குளிரில் தரையில் போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். போர்வை கூட இல்லாமல் உறைந்த காற்றில் துடித்த அந்தக் குழந்தையை யாரும் கவனிக்காமல் ரோட்டோரத்தில் விட்டுச்சென்றது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த நேரத்தில் அங்கே சுற்றித்திரிந்த நாய்கள் குழுவொன்று குழந்தையை நெருங்கி பார்த்த பின்னர், ஆச்சரியமாக அதைச் சுற்றி வட்டமாக அமர்ந்து ‘அரண்’ போல பாதுகாத்திருக்கின்றன. குழந்தைக்கு எந்த ஆபத்தும் நேராதபடி அவை சத்தம் போடாததும், யாரும் அணுக விடாததும் அக்கம்பக்கத்தினரிடம் பெரும் பேசுபொருளாக இருந்தது. விடியற்காலை அங்கு வசிப்பவர்கள் இந்த காட்சி கவனித்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அவர்கள் குழந்தையை எடுத்து துணியில் சுட்டி, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை நலமாக இருப்பதாக தெரிவித்தனர். பெற்றோரே கைவிட்ட பச்சிளத்தை, தெரு நாய்கள் உயிர் காக்க அரண் அமைத்து காத்தமை கல்கத்தா முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!