undefined

 தேனிலவை ரத்து செய்து புதுமணப்பெண் தற்கொலை...  விரக்தியில் புதுமாப்பிள்ளையும் தூக்கிட்டு தற்கொலை!

 

 

பெங்களூரு வித்யாரண்யபுராவைச் சேர்ந்த சூரஜ் சிவன்னா (26) – கன்வி (26) தம்பதியரின் வாழ்க்கை திருமணம் ஆன இரண்டு மாதங்களிலேயே துயரத்தில் முடிந்தது. கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட இருவரும் இலங்கைக்கு தேனிலவுக்குச் சென்ற நிலையில், கன்வியின் திருமணத்திற்கு முந்தைய காதல் விவகாரம் தெரியவந்ததால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஐந்து நாட்களிலேயே தேனிலவை ரத்து செய்து திரும்பிய அவர்கள், அதன் பின்னர் பிரச்சினைகளில் சிக்கினர்.

இதற்கிடையே பெற்றோர் வீட்டுக்குச் சென்ற கன்வி கடந்த வாரம் தற்கொலைக்கு முயன்று, மூளை செயலிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், கன்வியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக சூரஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளிக்கப்பட்டது. தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், கைது அச்சம் மற்றும் குடும்பத்தினர் போராட்டம் காரணமாக சூரஜ் தனது தாய், சகோதரருடன் பெங்களூரை விட்டு வெளியேறினார்.

ஹைதராபாத் வழியாக நாக்பூர் சென்ற அவர்கள், அங்குள்ள ஓட்டலில் தங்கியிருந்த போது சூரஜ் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். மகனை தூக்கில் தொங்கிய நிலையில் கண்ட தாய் ஜெயந்தியும் தற்கொலைக்கு முயன்றார்; அவர் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார். ஒரே திருமண விவகாரம் அடுத்தடுத்த சம்பவங்களால் இரு உயிர்களை வாங்கிய இந்த சம்பவம், பெங்களூரு முதல் நாக்பூர் வரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!