கணவர் சந்தேகம்... கல்யாணமாகி ஒரே மாசத்தில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை!
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மல்லசந்திரா பகுதியை சேர்ந்தவர் லிகித் சிம்ஹா. நாகமங்களாவை சேர்ந்த ஐஸ்வர்யா (26) என்பவருடன் கடந்த நவம்பர் இறுதியில் இவருக்கு திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு மல்லசந்திராவில் கணவருடன் வசித்து வந்த ஐஸ்வர்யா, ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் கணவரின் சந்தேகமும் தகராறும் காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
ஐஸ்வர்யாவின் நடத்தையில் சந்தேகம் கொண்ட லிகித் சிம்ஹா, அடித்து உதைத்து துன்புறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஐஸ்வர்யா தனது பெற்றோரிடம் தொலைபேசியில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மல்லசந்திராவுக்கு விரைந்து வந்தபோது, ஐஸ்வர்யா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஐஸ்வர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்ததை தொடர்ந்து, லிகித் சிம்ஹாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!