undefined

 நிப்ட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!  

 
 

நாட்டிலுள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனங்களில் இளநிலை, முதுநிலை மற்றும் பிஎச்டி படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம். அந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான நிப்ட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர் 8-ம் தேதி தொடங்கியது.

பல மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வரும் நிலையில், முதலில் அறிவிக்கப்பட்ட கடைசி தேதி ஜனவரி 13 என இருந்தது. ஆனால் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிக்கும் அவகாசம் ஜனவரி 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தாமத கட்டணத்துடன் ஜனவரி 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள மாணவர்கள் https://exams.nta.nic.in/niftee/ என்ற இணையதளத்தில் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய ஜனவரி 20 மற்றும் 21 தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும். இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!