ரமலான் நோன்பு கஞ்சி குடிக்கும் நேரத்தில் 3 இடங்களில் தற்கொலை படைத் தாக்குதல்... 23 பேர் உடல் சிதறி பலி, 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான போர்னோவின் தலைநகர் மைதுகுரியில் , திங்கள்கிழமை இரவு அரங்கேறிய தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் உலகையே அதிரச் செய்துள்ளன. மக்கள் நடமாட்டம் மிகுந்த மூன்று வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த வெடிகுண்டுச் சம்பவங்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 108 பேர் படுகாயமடைந்துள்ளனர். ரமலான் மாதத்தில் நோன்பு துறக்கும் நேரத்தில், மக்கள் உணவருந்திக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.
முதல் குண்டுவெடிப்பு அங்குள்ள பல்கலைக்கழக மருத்துவமனையின் நுழைவு வாயிலில் நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே, நகரின் பரபரப்பான 'திங்கள் சந்தை' மற்றும் தபால் நிலையப் பகுதிகளில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், போகோ ஹராம் அல்லது ஐ.எஸ்.டபிள்யூ.ஏ.பி தீவிரவாதிகளே இதற்குப் பின்னால் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. தற்போது லண்டனுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நைஜீரிய அதிபர் போலா டினுபு, இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பாதுகாப்புப் படைத் தளபதிகள் உடனடியாக மைதுகுரிக்குச் சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவும், தீவிரவாதிகளை வேரறுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!