மெரினாவில் வீடற்றவர்களுக்கு இரவு நேர காப்பகம்... உதயநிதி திறந்து வைப்பு...
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம் பின்புறத்தில் வீடற்றவர்களுக்கான இரவு நேர காப்பகம் இன்று திறக்கப்பட்டது. 2400 சதுர அடியில் அமைக்கப்பட்ட இந்த காப்பகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை மாநகராட்சி சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
டைல்ஸ் பதிக்கப்பட்ட தரை, கழிப்பறை, மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 86 பேர் தங்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. தங்கும் நபர்களுக்கு பாய், தலையனை, போர்வை உள்ளிட்ட தேவையான பொருட்களும் வழங்கப்பட்டன.
மெரினா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் வீடற்றவர்கள் இரவு நேரத்தில் பாதுகாப்பாக தங்க இந்த காப்பகம் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சமூக நலன் சார்ந்த இந்த முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!