பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம்... நிர்மலா சீதாராமன் உறுதி!
2026-27 நிதியாண்டு மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும், பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ள ஒதுக்கீடுகள் மாநில பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் கூறினார். உலகளாவிய பொருளாதார நெருக்கடி இருந்தாலும், இந்தியா 8 சதவீத வளர்ச்சியை தக்கவைக்கும் என்ற நம்பிக்கையும் அவர் வெளியிட்டார்.
VB-GRAMG திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் மூலம் தமிழ்நாடு கணிசமான பலன் பெறும் என அவர் குறிப்பிட்டார். மின்னணு துறைக்கு ரூ.40,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், “தமிழ்நாட்டில் மின்னணு தொழிற்சாலைகள் இல்லையா?” என கேள்வி எழுப்பினார். ஏற்கனவே மின்னணு உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாட்டில், இந்த ஒதுக்கீடு புதிய தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும் என்றார்.
பட்ஜெட்டை விமர்சித்த ராகுல் காந்தி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் கருத்துகளுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், பொருளாதார அடித்தளம் வலுவாக இருப்பதாகவும், தமிழ்நாட்டிற்கு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மாநில அரசு திட்டங்களை சரியாக பயன்படுத்தினால், கிராமப்புற வளர்ச்சி, உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல துறைகளில் தமிழ்நாடு மேலும் முன்னேறும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!