பாஜக புதிய தலைவர் நிதின் நவீன்… மோடி வாழ்த்து!
பாஜக தேசியத் தலைவராக நிதின் நவீன் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். கட்சி தொடர்பான விஷயங்களில் இந்த இளம் தலைவர் தனக்கும் தலைவராக இருப்பார் என்றும் அவர் கூறினார்.
தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி பேசினார். 45 வயதான நிதின் நவீனை, இந்தியாவில் பெரும் மாற்றங்களை கண்ட புதிய தலைமுறை இளைஞர் என அவர் வர்ணித்தார். அவரது செயல்பாடுகள் கட்சிக்கு புதிய வேகம் தரும் என்றும் தெரிவித்தார்.
பூத் நிலை முதல் தேசிய நிலை வரை கட்சிப் பதவிகளுக்கான தேர்தல்கள் நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து நிதின் நவீன் பாஜகவின் தேசியத் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அவரது தலைமையில் கட்சி புதிய பயணத்தை தொடங்கியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!