இளைய தலைமுறைக்கு வழிவிட வேண்டும்... நிதின் கட்கரி அறிவுறுத்தல்!
முக்கிய பொறுப்புகளை இளைய தலைமுறையினர் ஏற்க வேண்டும் என்பதற்காக, பழைய தலைமுறையினர் ஓய்வை அறிவித்து வழிவிட வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். தலைமுறை மாற்றம் படிப்படியாக நடைபெற வேண்டும் என்பதே தனது கருத்து என்றும் அவர் தெரிவித்தார். மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதை கூறினார்.
ஆசிஷ் காலேயின் தந்தை தனது பொறுப்புகளை மகனிடம் ஒப்படைத்தது நல்ல முன்னுதாரணம் என கட்கரி குறிப்பிட்டார். அதுபோல மூத்தவர்கள் பொறுப்புகளில் இருந்து மெதுவாக விலக வேண்டும் என்றார். அனைத்தும் சீராக செயல்படத் தொடங்கிய பிறகு முழுமையாக ஓய்வு பெற்று வேறு பணிகளில் கவனம் செலுத்தலாம் என்றும் தெரிவித்தார்.
நாகபுரியில் பிப்ரவரி 6 முதல் 8 வரை விதர்பா–கஸ்தார் தொழில் முதலீட்டு மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் 350 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. ரஷியா, சீனா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். சர்வதேச முதலீட்டாளர்களுடன் 20-க்கும் அதிகமான வணிக ஒப்பந்த கூட்டங்களும் நடத்தப்பட உள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!