45 வயதில் பாஜ தேசிய தலைவர்… இளம் வயதில் புதிய சாதனை படைத்த நிதின் நபின்!
புதிய பாஜ தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிதின் நபின், மிகவும் இளம் வயதில் அந்தப் பதவியை அடைந்த தலைவராக உருவெடுத்துள்ளார். 26 வயதில் எம்எல்ஏவாக தேர்வான அவர், தற்போது 45 வயதில் தேசிய தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார். இது பாஜ அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த தீப்மாலா ஸ்ரீவஸ்தவாவை நிதின் நபின் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்த நிதின் நபின், நீண்ட அரசியல் பயணத்தின் மூலம் இன்று கட்சியின் உச்ச பொறுப்பை அடைந்துள்ளார்.
1980-ஆம் ஆண்டு பாஜ தொடங்கப்பட்டபோது வாஜ்பாய் முதல் தேசிய தலைவராக இருந்தார். அதனைத் தொடர்ந்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, குஷாபாவ் தாக்ரே, பங்காரு லக்ஷ்மன், ஜனா கிருஷ்ணமூர்த்தி, வெங்கையா நாயுடு, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அமித் ஷா ஆகியோர் தலைவர் பதவியை வகித்தனர். 2020 முதல் ஜேபி நட்டா தலைவராக இருந்த நிலையில், தற்போது அந்தப் பொறுப்பை நிதின் நபின் ஏற்றுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!