undefined

பாஜக புதிய  தேசிய தலைவராக நிதின் நபின்  இன்று பதவியேற்பு!  

 

பாஜ தேசியத் தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து புதிய தலைவர் தேர்வு நடைபெற்று வந்தது. இதற்கிடையே கடந்த மாதம் 14-ஆம் தேதி பீகார் அமைச்சர் நிதின் நபின், பாஜ தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, நேற்று வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது.

நிதின் நபினுக்கு ஆதரவாக அவரது வேட்புமனுக்களை பாஜ மூத்த தலைவர்கள் தேர்தல் அதிகாரி கே. லட்சுமணிடம் வழங்கினர். ஜேபி நட்டா, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் பல மாநில முதல்வர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். பிரதமர் மோடியும் நிதின் நபினின் வேட்புமனுவை முன்மொழிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

நிதின் நபினை எதிர்த்து வேறு யாரும் மனுத் தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி பாஜ தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இன்று அவர் அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்க உள்ளார். பீகாரில் இருந்து ஐந்து முறை எம்எல்ஏவாகவும், மாநில பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!