நாளை பா.ஜ.க. புதிய தேசிய தலைவர் தேர்தல் நிதின் நபின் நியமனம்?
பா.ஜ.க. தேசிய தலைவராக ஜெ.பி. நட்டா பதவி வகித்து வந்தார். அவர் பதவிக்காலம் முன்பே முடிவடைந்திருந்தாலும், சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலை முன்னிட்டு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், புதிய தேசிய தலைவருக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம், 4 மணி முதல் 5 மணி வரை வேட்புமனு பரிசீலனை நடைபெறும்.
நாளை (20.01.26) தேர்தல் நடைபெற உள்ளது. அதே நாளே பா.ஜ.க. புதிய தேசிய தலைவர் யார் என்பதை அறிவிக்க உள்ளனர். தேர்தலை கே. லட்சுமண் நடத்தவுள்ளார்.
தற்போது கட்சியின் தேசிய செயல் தலைவராக செயல்பட்டு வரும் நிதின் நபின், புதிய தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. கடந்த தடவை ஜெ.பி. நட்டா தேசிய செயல் தலைவராக இருந்த பின்னர் தேசிய தலைவராக பதவியேற்றார் போலவே, நபின் தேர்வு செய்யப்பட்டால், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்களிடமிருந்து ஆதரவு பெற்றுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!