பீகாரின் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார்.... நவம்பர் 20ம் தேதி பதவியேற்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு!
பீகார் அரசியலில் நீண்ட நாட்களாக இருந்த குழப்பத்துக்கு முடிவாக, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமார் இன்னும் ஒருமுறை முதல்வராகப் பதவியேற்க உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற மிகப்பெரிய வெற்றி, மீண்டும் நிதீஷ் குமாரின் தலைமையை உறுதிப்படுத்தியுள்ளதாக கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 20-ஆம் தேதி பாட்னா காந்தி மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய தேசிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். அதே நிகழ்வில் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் துணை முதல்வராகவும் பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அமைச்சரவை அமைப்பில் பாஜகக்கு 16, ஐக்கிய ஜனதா தளத்துக்கு 15, சிராக் பாஸ்வான் கட்சிக்கு 3, மேலும் கூட்டணியில் இணைந்துள்ள பிற கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சரவை இடம் வழங்கப்பட உள்ளது. இன்று நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்திலேயே நிதீஷ் குமார் அடுத்த முதல்வராக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!