undefined

மாணவர்களே மிஸ் பண்ணாதீங்க... NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு!

 
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத் தேர்வு வரும் ஜனவரி 10ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. உதவித் தொகை வழங்க மாணவர்களை தெரிவு செய்யும் வகையில் இந்த என்எம்எம்எஸ் தேர்வு அனைத்து வட்டார அளவில் தேர்வு மையங்களில் நடத்தப்படுகிறது.

இந்த தேர்விற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.50 ஆன்லைன் கட்டணத்தை செலுத்தி பள்ளி தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அதிகமானோர் பயன் பெறும் வகையில் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விண்ணப்பங்களை வரும் 23ம் தேதி மாலை 5 மணி வரை பதிவேற்றம் செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!